Total Pageviews

Sunday, December 2, 2018

திருப்புகழ் 62

வெண்டையம் என்பது போர் வீரர்கள் அணிந்திருக்கும் ஆதிதமிழர்களின் செருப்பு

அது ஒரு பூட்ஸ் போல

ஓடினால் அவிழாதபடி தண்டையுடன் கோர்த்து கட்டப்பட்டிருக்க வேண்டும்

தண்டையணி வெண்டையம் கிங்கிணிசதங்கை என்கிறார் அருணகிரியார்

குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்போதும் பூட்ஸ் போட்டு அழகுபார்ப்பார்கள் அதில் ஊதா இருக்கும்

அந்த சத்தத்தை கேட்டு குழந்தை அங்கும் இங்கும் ஓடும்

தங்கள் தங்கள் அலுவலைப்பார்த்துக்கொண்டே தாயும் தகப்பனும் குழந்தை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை கண்காநித்துக்கொண்டே இருப்பார்கள்

வித்தியாசம் என்றால் உடனே வந்துவிடுவார்கள்

சிவனும் கெளமாரி யும் எப்போதும் தண்டையுடன் கூடிய வெண்டயத்தை கிங்கிணிசதங்கை கோர்த்துக்கட்டி முருகனுக்கு மாட்டி அழகுபார்த்துள்ளார்கள்

அதற்கு மேலே அழகிய சிலம்பும் வேறு

அதிதேவர்கள் வீட்டு பிள்ளையல்லவா

இந்தப்பிள்ளை அசகாய மாய சூரர்களுடன் அல்லவா மல்லுக்கு வந்தது

திருச்செந்தூர் வந்து இப்பாடலை அருணகிரியார் பாடுகிறார்

சின்னஞ்சிறு பிள்ளை சண்டைக்கு வந்துவிட்டதே

அப்பனும் அன்னையும் சும்மாவா இருந்தார்கள் என்றால் அவர்கள் கண்கானித்துக்கொண்டுதான் இருந்தார்கள் என்பதற்குத்தான் இந்த பூட்ஸ் கதை

அப்புறம் சொல்கிறார்

உன் தந்தையினை வலம் வந்து சகலத்திலும் அவருடன் சந்தோசமாக கூடியிருப்பவன் நீ

அதுபோல கடம்பமாலை ; மணிமகுடம் ;தாமரை மலர் போன்ற சிவந்த கைகள் ; வேலும் கொடியும் ; பன்னிரு கண்ணும் ஆறு முகமும் ; ஆறுவகை சந்திர நிறங்களும்

( சந்திரனின் நிறங்கள்…
1. பெளர்ணமி அன்று - மஞ்சள் (Yellow)
2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு = வெளிர் நீலம் (Blue moon)
3. மாலையில் - வெள்ளை (White)
4. காலையில் - சாம்பல் (Grey)
5. குளிர் காலத்தில் - காவி (Orange)
6. அபூர்வமாக, கிரகண காலங்களில் - சிவப்பு (Red) )

என் கண்கள் குளிரும்படியாக என் முன் தோன்றாவோ

சூரணை அடக்க நீ போர்க்களத்தில் எழுந்தருளிய போது, பிரம்மன் படைப்பு தொழில் செய்யும் இவ்வுலகமும், பிற அண்டங்களும் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்தன . உன் அடிகள் வைத்த அடவுகளை கண்டு திருமாலும், சிவனும் மகிழ்ச்சி கொண்டனர்

அதுபோல நான் மகிழும்படியாக செந்தூரில் நடன பாதங்களை காண்பித்தவனே, கந்தனே, குற மங்கையின் அழகிய மணத்தை நுகர்பவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே,

Tuesday, April 18, 2017

திருப்புகழ் 170




நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
 
திருப்புகழ் 17௦ ஆடியோ Click & Hear


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம

நாதமும் விந்தும் கலப்பதால் உண்டாகும் சரீரத்தில் பூமியில் பிறப்பவன் மனிதன்
நாதமும் விந்தும் கலக்காமல் முருகன் மனிதனைப்போல பூமியில் பிறப்பவன் என்கிறது திருப்புகழ்
 
ஆண்பெண் சேர்க்கையினால் கருத்தரித்த பிண்டத்தில் நின்று பிறப்பவன் முருகன் அல்ல
 
தீதம் என்றால் கலக்கப்பட்டது கலவை
அதீதம் என்றால் கலவை அற்ற நிலை
ஆண்பெண் கலக்காமல் பிறந்த மனிதன் வேதமந்திர சொருபமாக பூமியில் இருப்பான்
 
சிவன் நாதவிந்து சேர்க்கையினால் வந்தவரல்ல

ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவரும் ஆண்பெண் சேர்க்கையில்லாமல் பெண்ணின் கர்ப்பபையை மட்டும் பயன்படுத்தி பிறந்த நாராயண அவதாரங்களாகும்

இந்த நால்வரும் வேதங்களை அருளியதும் அல்லாமல் வேதமாகவே அவர்களது வாழ்க்கை இருந்தது
 
வேத மந்திர சொருபங்களாகவே அவர்கள் பூமியில் இருந்தார்கள்
 
தம்மை அண்டியோர்க்கு ஞானத்தை வாரிவழங்கியும் வருகின்றனர்
 
பண்டிதன் என்றால் ஆசிரியன் குரு என்பதாம்
 
இந்நால்வரும் ஞான குருவாக கடவுளின் சார்பாக நமக்கு உபாத்யாயம் செய்பவர்கள்
ஞான பண்டிதசாமீ நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம

சற்குரு என்ற பதம் கடவுளுக்கு அடுத்தவரை குறிக்கிறது
 
ஆண்பெண் கலப்பில் பிறந்த யாரும் குருவாகலாம்
 
ஆனால் சற்குரு என அழைக்க அவர்களுக்கு தகுதியில்லை
 
ஆண்பெண் கலக்காமல் பிறந்தவரே சற்குரு

வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம

சிவனுக்கு கொஞ்சநஞ்ச பெயர்களா இருக்கின்றன
 
உலகம் முழுதும் மனித குலங்களின் குலதெய்வ வழிபாடுகளில் பாதிக்கு மேல் சிவனை குறிப்பதாகும்
 
காரணம் ஆதிமனிதரான சிவன் பூமியில் ஆங்காங்கு சிலவருடங்கள் தங்கி ஆங்காங்கு மனித குலத்தை தோற்றுவித்தார்
 
சம்பு என்றால் தனக்குள்ளாக தேக்கி வைத்து வெளியே விடும் இருப்பு ஆகும் சம்ப் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமல்லவா
 
பரலோகத்தில் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட முதல் மனிதனான சிவன் அர்த்தநாரியாக இருந்தார் 

அவருக்குள்ளிருந்தே பாதி ஆள் பார்வதி வெளிபடுத்தப்பட்டாள்

பூமிக்கு அனுப்பப்பட்ட அவ்விருவரும் மனித குலத்தை பூமி முழுதும் பலுகி பெருக்கினர்
 
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
மனித சமுதாயத்தை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்தியதால் சிவன் சம்பு வெகுகோடி நாமம் உள்ளவர்
 
பூமியில் மனிதனாக வருகிற யாரும் சிவகுமாரர்களே
 
நாராயணனே பூமிக்கு அவதாரமாக வந்தாலும் அவரும் சிவக்குமாரே
 
சிவனிடம் பார்வதி நமக்கு பின்பு நம் பிள்ளைகளை யார் நல்வழிப்படுத்துவார் என கேட்டபோது சிவன் உபதேசித்தருளியது குருகீதை
 
குருகீதையின் முக்கியமான சரத்து
பரலோகத்தில் நாராயணனாக இருப்பவர் அவ்வப்போது பூமிக்கு சிவக்குமாரனாக வருவார்
 
நாராயணன் சிவக்குமாரனாக மாறி வருவதால் அவர் முருகன்
 
அவ்வாறு பூமிக்கு வரும் முருகர்களை மனிதர்கள் குருவாக ஏற்றுக்கொண்டு நல்வழிப்பட்டால் உய்வடைவார்கள் என்பதாகும்
 
அவ்வாறு பூமிக்கு வந்த முருகர்கள் ராமர் கிரிஷ்ணர் இயேசு ஆகும்
 
நாம சம்பு குமாரா நமோநம

கோசலை மைந்தா
கைகேயி புத்ரா
யசோதை பாலா
தேவகி மைந்தா
மேரி மைந்தா
என அன்னையர்களின் பேராலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர் அவ்வளவு அன்பை அன்னையர்கள் மீது அவர்கள் காட்டினர்
 
போக அந்தரி பாலா நமோநம

மயூரம் என்றால் அழகான ஒய்யாரமான மயில் அவன் மகிழ்ச்சியை ஒய்யாரத்தை தன்னை அண்டியோர்க்கு வாரிவாரி வழங்குபவன்
 
மயில்வாகனன் என்றால் சற்குருவான முருகன் தன் சீடர்களின் மூலமாக பூமிக்கு ஞானத்தை மகிழ்ச்சியை வழங்குகிறவன் என்பதாம்
 
அவனிடம் ஞானம் பயில்வோர் பூமியில் உலகியல் விசத்தை அடக்குகிறவர்களாக இருந்து சமநிலைப்படுத்துவர்
முருகனின் வாகனமான மயில் காலில் நாகத்தை அடக்கி வைத்திருப்பதுபோல ஞானம் உலகியல் விசத்தை அடக்கும்
 
நாக பந்த மயூரா நமோநம

பரசூரர்
சேத தண்ட. வி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம

அசுரர்களே சகல பிரச்சினைகளுக்கும் பின்னணி
 
ஆவிமண்டல பின்னணியில்லாமல் பூமியில் சிக்கல்கள் கெடுதல்கள் நடப்பதில்லை

நாம் அந்தாள் சரியில்லை இவர் கெடுதல் பன்றார் என மனிதர்களையே குறைசொல்லிக்கொண்டிருப்போம்

வியாதிக்கு இது கூடிப்போச்சு அது குறை என டாக்டர் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்

இவைகளுக்கு பின்னணியில் ஆவிமண்டலத்தை சரி செய்தால் ஒழிய மூர்க்கமான பிரச்சினைகள் தீராது

நோய்க்கும் பாரு
பேய்க்கும் பாரு
ஏன்பது பழமொழி

உடனே மந்திரவாதியை போய் பார்க்கலாகாது

ஏவல் பில்லிசூனியம் அவனே வைப்பான் அவனே ஏடுத்துக் விடுவான்
அது நல்லவழியல்ல

நல்லவழியில் இறைவனை பிடிப்பது
நமக்கு தெரிந்த தேவசக்திகளை குருவாக வைத்து இறைவனை பிடித்துபாருங்கள்

உடனே யார் கடவுள் நான் கடவுளா அவர் கடவுளா என அசுர சக்திகள் குழப்பத்தை கொண்டுவரும்

யாரெல்லாம் கடவுள் என்பதாக உங்களுக்கு தெரிந்திருக்கிறதோ அவர்கள் மூலமாக கடவுளே உம்மை வணங்குகிறேன் என சொல்லிப்பாருங்கள்

வெற்றி மேல் வெற்றி

ஒருவர் கடவுள் ஏன்று வைத்துக்கொள்வோம் கடவுள் மூலமாக கடவுளை வணங்கினால் என்ன குற்றம் வரும்

அதே நேரத்தில் கடவுளைவிட குறைந்த ஒரு சக்தியை கடவுளே என வழிபட்டால் உன் பிரார்த்தனை தோல்வியில் முடிகிறது

ஆகவே உனக்கு தெரிந்தவரையே வழிபடாமல் அவராக வெளிப்பட்ட இறைவா என வணங்கும் முறைதான் ஆதி இந்து நெறியாகும்

மூலமந்திரங்களை பாருங்கள்

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ சிவாய

ஆய ஆய என ஏன் முடிகிறது

சிவனாக ஆனவனை நாராயணனாக ஆனவனை வழிபடுகிறேன்
 
தண்டம் ஆண்டியின் கையிலிருப்பது
சகலத்தையும் நான் நீ அது ஏன்ற பேதத்தை கடந்த முழுசரணாகதி மனநிலையே ஆண்டி

அந்த ஆண்டி முருகனின் தண்டம் பரத்திலுள்ள அசுரர்களுக்கு சேதத்தை உண்டாக்கும் மர்மம் ஏதனால்

சற்குரு முருகன் சகல மதமாச்சரியங்கள் உருவங்கள் பெயர்கள் ஏல்லாவற்றையும் துறந்தவராக இறைவனை சரணாகதி அடைந்துவிட்டார்

ஞானம் அவருக்கு ஊற்றெடுக்கிறது
கள்ளம் கபடம் நன்மை தீமை கடந்த பாலகனின் உள்ளமாக விளங்கினார்
 
இருமைகளை கடறாமல் இறைவனின் முழுமையை தரிசிக்கமுடியாது

ஏதாவது ஒரு மாயையில் அசுரர்கள் உங்களை கவிழ்த்து சுத்தவிட்டுவிடுவார்கள்

தீரத்தோடு அசுரர்களுடன் மல்லுக்கும் நிற்பவன் முருகன் ஏனென்றால் அவன் ஏந்த பற்றுகளையும் வேறுபாடுகளையும் கடந்த சமத்துவமானவன்

யார் இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டார்களோ அந்த சற்குருநாதர்களெல்லாம் மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டே இருந்தார்கள்

கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள்
 
குன்றுகள் அடர்ந்த காடுகள் மத்தியில் இருந்தால் கூட பளிச்சென உயர்வாக அடையாளமாக இருப்பவை

5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

7:24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

7:25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

யார் ஆன்மீக வாழ்வில் வளர்ந்து சற்குரு நாதர்கள் அல்லது இறைமனிதர்களின் வழிகாட்டுதல் படியாக வாழ்கிறார்களோ அவர்களது உலக வாழ்வு இறைபேரரசால் குன்றின் மேல் கட்டப்பட்டவர்களாக பாதுகாக்கப்படுவார்கள்
 
அவர்களெல்லாம் முருகனைப்போல கிரிராஜர்களே
 
இந்த கிரிராஜர்களே இறைநபர்களே உலகிற்கு வெளிச்சம் கொடுக்கும் கார்த்திகை தீபங்களாக ஆங்காங்கே இருப்பார்கள்
 
தேவர்களின் வழிநடுத்துதல் இவர்களுக்கு எப்போதும் இருக்கும் தூய அம்பலமான ஏக அருவ இறைவனோடு உறவாடுகிரவர்களாக இருப்பார்கள்
 
இறை அடியவர்களின் வாழ்வில் மற்ற மனிதர்களுக்கு அருளை ஈதல் வழிகாட்டல் ; அதில் மற்ற மனிதர்களால் மதிக்கப்படும் கோலால பூஜை நற்குண ஆசார நீதி போன்ற கீர்த்திகள் உண்டாகும்
 
நெற்கதிர்களால் செழித்த வயலுரின் தலைவர்களாக இறைமனிதர்கள் இருப்பார்கள்
 
அன்பின் மிகுதியால் கரூர் அரசரை சிவன் கயிலாயத்திற்கு அழைத்தபோது வெள்ளைக்குதிரையின் மீதேறி கயிலாயம் சென்றார்
 
அப்போது அடைக்கப்பட்ட வாசலை திறக்க ஆசு கவி பாடியவுடன் வாசல் திறக்கப்பட்டது
 
இதுவே இறைமனிதர்க்கு இறைவனால் உண்டாகும் மகிமையாகும்
 
அத்தகைய நாட்டில் உள்ள திருஆவினன் குடியில் வாழும் இறை மனிதர்களின் பெருமாள் ஆனவர் சற்குரு முருகனாவார்


நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது பேரருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி




Sunday, January 17, 2016

கந்தர் அநுபூதி 3 , 5 ,12

கந்தர் அநுபூதி 3





ஆகாயம் வெப்பம் மண் நீர் இதமான காற்று ஆகிய பஞ்சபூதங்களா மனிதர்க்கு உள்ளுணர்வாக விளையும் ஞானமா அல்லது இறைதூதர்கள் மூலம் வெளிப்படுகின்ற நான்கு வேதங்களா அல்லது ஆறுமார்க்கங்களாக பூமியை வழிநடத்தும் சண்முகமா உம்மை ஏவ்வாறு உணர்வது?

நானாகிய என் மனத்தை நீ ஆண்டுகொண்டால் அவ்விடத்தில் உன்னை உணரலாகுமல்லவா?

கந்தர் அநுபூதி 5



மனதுக்கு இதமான ஆறுதல் பெண்களிடத்து உண்டு என மடந்தையர்களிடம் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறதாம்

அகமாயை ஜகமாயை என உள்ளும் பறம்பும் விதவிதமாக மனிதனை கட்டுகிற மகாமாயைகளை களையும் திறமை ஞானத்தின் அதிபதியான அதிதேவர் ஆதிசேசனுக்கே உண்டு அதாவது அவரது வியாபகமான முருகனுக்கே உண்டு அதற்கு அவர் ஆறுமார்க்ங்களை பூமியில் இறைதூதர்கள் மூலமாக கொடுத்து ஒவ்வொரு மனித ஆத்மாவையும் வேறுவேறு நாட்டில் வேறுவேறு மதங்களில் மாறிமாறி பிறக்கவைத்து கற்றுக்கொடுக்கிறார்

தனது ஆறுமுகத்தை முருகன் மொழிந்துவிட்டார் அதாவது சொல்லிவிட்டார்
ஆனால் மனிதர்களோ மாயைகளை ஒழிக்க முயற்சிப்பதில்லை

இந்த மதத்தில் பிறந்து மற்ற மதங்களை காறிகாறி துப்புகிறார்கள் அடுத்த பிறவியில் அந்த மதத்தில் பிறந்து இந்த மதத்தை காறிகாறி துப்புகிறார்கள்

அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் மார்க்க சண்டை கள் செய்து இரத்தத்தை ஓடவிட்டுக்கொண்டிருந்தனர்

சமரசவேதாந்தியான அருணகிரிநாதர் அதை சாடுகிறார் அவரின் திருப்புகழ் பாடல்கள் அனைத்திலும் சிவகுமாரனே என ஆரம்பித்து பெருமாளே என முடித்திருப்பார்

கந்தர் அநுபூதி 12


பூமியில் புண்ணியம் மிகுதியாக செய்தவர்கள் இந்திரலோகம் சென்று அதன் பலனை அனுபவித்துவிட்டு பின்பு மீண்டும் மனிதனாக பிறப்பார்கள் என்கிறது கீதை

ஆகவே இந்திரனை செம்மையானவன் ஏன்கிறார் அருணையார்

இந்திரனின் மகளான தேவானையை முருகன் களவெடுத்து திருமணம் செய்துகொள்கிறாராம்

அதாவது செம்மையான நமது நற்குணங்களை முருகன் நேசித்து நமக்கு குருமார்களை அனுப்பி எப்போதும் நாம் வளரும்படியாக நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பார் . நமக்கு தெரியாமலேயே நம்மை அவர் வழினடுத்துவதால் இதை களவு என்கிறார் அருணையார்

ஆண்பெண் பேதங்களே இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

முருகனும் ஆண்பெண் பேதத்தை கடந்தவர் பிறப்பு இறப்பு அற்றவர் அதாவது அதிதேவர்களுள் ஒருவரான ஆதிசேசனே முருகன்

மனிதர்களின் மனதில் அலைஅலையாக சிந்தனைகள் சொற்கள் எழும்பிக்கொண்டே இருக்கும் சும்மாவே இருக்காது
முருகன் அருணகிரிக்கு உபதேசித்த வார்த்தை சும்மாயிரு

சற்குருநாதரிடமிருந்து அந்தவார்த்தை வந்ததுமே நிற்விகல்பசமாதி அருணையாருக்கு சித்தித்து விட்டது

குருவாசகம் நமக்கென வந்தால்போதும் அது அப்படியே நம் ஆத்மாவை வசப்படுத்தி நம்மை தெளியவைத்து விடும்

ரமணாசிரமத்திற்கு சற்று மேற்கேயுள்ள முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட. முருகன் கோவிலில் அவர் எத்தனை ஆண்டுகள் தவத்தில் இருந்தார் என யாருக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது

ஆனால் காமக்கசடுகள் நீங்கியவராக பாவங்கள் கழிந்தவராக பரிசுத்தம் அடைந்தபோது அவர் முருகனால் எழுப்பப்பட்டார் பாடு என பணிக்கப்பட்டார் வேலால் அவர் நாவில் எழுதினர்  அருளில் நிரம்பிய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

Monday, March 3, 2014

முன்னுரை !!

திருப்புகழ் விளக்கம்

---அருணகிரிநாதர் அருளியவை ---
          உள்ளார்ந்த மறைபொருள்கள் 

முருகன் என்றால் அசுரர்களை அழித்து தேவர்களை , பக்தர்களை காக்கிறவர் என்பது தமிழ் மறை !!

முருகு என்றால் மாறி வருதல் என்பது பொருள் !
விண்ணில் தேவர்கள் அசுரர்களால் அடக்கி ஒடுக்க பட்டு மண்ணிலும் மனிதர்கள் அசுர மாயங்களால் பீடிக்க படும்போது அதை விடுவிக்க தேவதூதன் --வாணவர் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி வருகிற கடவுளின் பிரதிநிதி --குமாரன் என்பது !
அந்த குமாரன் ஞானத்தை ஆயுதமாக கொண்டவர் ! சூரணனின் பல வகையான மாயைகளை அழித்தவர் ! மனிதர்களுக்கு சற்குரு !
குரு என்றால் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமானவர் ! அல்லது வழி காட்டி !
நமக்கு ஒன்றை கற்றுத்தந்தவர்கள் எல்லோரும் உபகுரு !
சற்குருவோ எல்லா அறிவிற்கும் ஞானத்திற்கும் ஊற்றுகண்ணாக இருந்து கடவுளை காட்டி கொடுக்கிறவர் !
அர்ணகிரி நாதர் அவரை அநுபூதி நிலையில் உணர்ந்து பாடியவை ஞான மறை பொதிந்த பக்தி பாமாலையாகும் ! அவைகளின் பொருளை உணர்ந்து அனுபவித்தால் அனுபூதியடையலாம் ! அப்படி சிலவற்றை இங்கு தருகிறேன் !

கந்தர் அனுபூதி -18





இந்தப்பிலேயரிலும் கேட்கலாம் :

https://ia601502.us.archive.org/31/items/TrackNo081/Track%20No08_1.ogg



உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே

உதியா மரியா --பிறப்பு இறப்பு அற்றவன் !
கடவுளும் அவரால் நித்திய ஜீவன் அருளப்பெற்ற தேவதூதர்கள் மட்டுமே பிறப்பு இறப்பு அற்றவர்கள் !!

உணரா மறவா --- இருமைகளை கடந்த யோகம் கைவரப்பெற்ற நிலை !

இன்பம் துன்பம் ; விருப்பு வெருப்பு ;  புகழ் அவமானம் ; செயல் செயலின்மை ; வெற்றி தோல்வி போன்ற இருமைகளே அசுரர்களின் மாயைகளுக்கு அடிப்படையானவை ! இந்த மாயைகளுக்கு அப்பாற்பட்டவன் ! நிர்க்குணமானவர் கடவுள் ! அவரால் ஞானம் அருளப்பட்டவர்களும் நிர்க்குண நிலையை அடைவார்கள் !

விதிமாலறியா விமலன்  --எந்த வரையறைக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் !

புதல்வா --குமாரன் --கடவுளின் பிரதினிதியாய் பூமிக்கு வருகிறவர் !

அதிகா வநகா வபயா--மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே !

வமரா பதிகா வலசூ ரபயங் கரனே --- தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, அசுரனாகிய சூரனுக்கு பயத்தை தருபவனே !

யோகத்திலும் ஞானத்திலும் வளர்வோருக்கு கடவுளை தேடுவோருக்கு அசுரர்கள் பல வகையான மாயைகளை கொணர்ந்து தடைகளையும் உபத்திரவங்களையும் கொடுப்பார்கள் ! அதை அழித்து ஞானத்தை கொடுக்கும் குரு --கடவுளின் பிரதினிதி ! கடவுளுக்கும் மனிதனுக்கும் பாலமாய் இருப்பவன் ! ஞான வேல் உள்ளவன் !

குரு -- இறைதூதர்களில் இரண்டு வகை உண்டு ! மனிதன் குருவாய் உயர்வது ! தேவதூதன் பூமிக்கு வருவது ! தூதர்களில் மனித தூதர் ; மலக்கு தூதர் என இரண்டு வகை தூதர்கள் பூமிக்கு வந்ததாக குரானும் குறிப்பிடுகிறது !

 குரான் 22:75. : அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.

முருகு என்றால் மாறி வருகிறவர் என்றொரு பொருள் உண்டு !

கடவுளின் பிரதினிதியாக தேவதூதன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி பூமிக்கு வந்து அசுரர்களின் கிரியைகளை அழிக்கிறவர் முருகன் !! யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற மலக்கு தூதன் !--யுக புருஷன் !!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!

அப்படி பூமிக்கு வந்தவர்கள் !

திரேதா யுகத்தில் ராமன் --ராமன் என்றாலேயே குமாரன் --புதல்வன் என்பது பொருள் !

துவாபர யுகத்தில் கிருஸ்ணர் ! --காண்கிறவர் என்று பொருள் ! மனித மனத்தின் பல்வேறு தளைகளையும் குழப்பங்களையும் துன்பங்களையும் கண்டு அதிலிருந்து விடுபட 18 யோக வழிமுறைகளை --கீதையாக தந்தவர் !

இன்று மக்கவாக இருக்கும் இடம் பாலைவனமாக இருந்தபோது கையிலிருந்த பச்சிளம் குழந்தை இஸ்மாயில் தண்ணீரிலாமல் சாகப்போகும் நிலையில் அதன் தாயார் ஹஜிரா தன்னந்தனியாய் அழுதபோது தேவதூதன் ஒருவர் தோன்றி நீரூற்று ஒன்றை உற்பத்தி செய்தார் ! அவரை ``எல்ரோயி ``-- காண்கிறவரே -- கிருஸ்ணரே என்றே ஹஜீரா அழைத்தார்கள் !

கலியுகத்தில் இயேசு ! --- விடுவிக்கிறவர் என்பது பொருள் ! ஜெஹோவா சூவாஸ் என்ற எபிரேய பதமே சுருக்கமாக ஜீசஸ் ! கடவுள் விடுவிக்கிறார் !!

இம்மூவரும் ஒருவரே என்பதும் அவரே முருகனாக தமிழுக்கு போகரால் அரிமுகம் செய்யப்பட்டார் என்பதும் உண்மையாகும் !

இந்த யுக புருஷனின் உதவியாளர் ஒருவரும் உள்ளார் !

ராமனுக்கு லக்ஷுமனனும் ; கிருஷ்னருக்கு அர்ச்சுணனும் ; இயேசுவுக்கு முஹமதாகவும் அவர்கள் வந்தார்கள் !!

கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! 

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்  

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 





திருப்புகழ் 567 !!


இந்தப்பிலேயரிலும் கேட்கலாம்

https://ia801505.us.archive.org/17/items/08Track8_20160731/08%20Track%208.ogg


பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.



பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி


உன் மீதுள்ள பக்தியால் பல காலமாக உன்னை விடாது பற்றிக்கொண்டு மகத்தான திருப்புகழை பாடுகிறேன் !

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே


நித்திய ஜீவன் உள்ள பெருவாழ்வு பெற்று கடவுளுடன் சேர்வதற்கு வழியை அருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா


உத்தமனே ! இரக்கமும் நற்குணமும் உள்ளோரை நேசிக்கிறவனே ! ஒப்பில்லாதா மாமணியே ! உயர்ந்த பரலோகத்தில் வாசமாயிருக்கிறவனே !

வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

ஆற்றல் நிறைந்தவனே ! ஞானம் நிறைந்த பாதையை காட்டவல்லவனே ! அசுரர்களை வெல்லும் ஞான வேலை உடைய பெரியவனே ! குருவாக கடவுளால் அனுப்பபடுகிற இறைதூதனே!!